இளம் மனைவியின் ஆடையை பயன்படுத்தி அவரின் கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்தில் கணவன் மூதூர் பொலிஸாரால் கைது.மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் மனைவியைக் கொன்றுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், கணவர், மனைவியின் ஆடையின் ஒரு பகுதியை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த குற்றத்தில் 33 வயதுடைய சந்தேக நபரான கணவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன், மூதூர் பொலிஸார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் மனைவியின் ஆடையை பயன்படுத்தி அவரின் கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்தில் கணவன் மூதூர் பொலிஸாரால் கைது. இளம் மனைவியின் ஆடையை பயன்படுத்தி அவரின் கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்தில் கணவன் மூதூர் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on February 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.