பொது போக்குவரத்தில் பாலியல் சில்மிஷங்களை கண்காணிக்க சென்றவர்கள் மீதே பாலியல் சில்மிஷம் செய்தவர் கைதுசிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் கண்காணிக்க பஸ் ஒன்றில் சென்ற சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதே பயணி ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சந்தேக நபரான பயணி தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் என மேலும் தெரிவிக்க படுகிறது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு தழுவிய நீதி
நடவடிக்கையுடன் இணைந்து பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது போக்குவரத்தில் பாலியல் சில்மிஷங்களை கண்காணிக்க சென்றவர்கள் மீதே பாலியல் சில்மிஷம் செய்தவர் கைது பொது போக்குவரத்தில் பாலியல் சில்மிஷங்களை கண்காணிக்க சென்றவர்கள் மீதே பாலியல் சில்மிஷம் செய்தவர் கைது Reviewed by Madawala News on February 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.