மைத்திரிபால சிறிசேனவின் மகள் குடியிருக்கும் வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு . முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள்  குடியிருக்கும் பத்தரமுல்ல விக்ரமசிங்கபுர இல் அமைந்துள்ள  இரண்டு மாடி வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 திருடப்பட்ட பொருட்களில் வீட்டின் அலமாரியில் இருந்த 1,50,000/=, தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கைக்கடிகாரம், 8 தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள், உலர்  உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பை என்பன உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். .


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர்  கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, ​​வீடு திருடர்களால் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 இனந்தேரியாத நபர்கள்  கண்ணாடிக் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவின் மகள் குடியிருக்கும் வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு .  மைத்திரிபால சிறிசேனவின் மகள்  குடியிருக்கும் வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு . Reviewed by Madawala News on January 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.