கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குறிய ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஏற்றுக்கொண்ட சஜித், கோட்டபாய ராஜபக்சவையும் இணைத்துக் கொள்வார் என சரத் பொன்சேகா கடுமையாக சாடினார்.முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை சஜித் ஏற்றுக் நடவடிக்கை குறித்து, சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இந்த வாரம் சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தாம் சிறையில் அடைக்கப்பட்டதில் தயா ரத்நாயக்க முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தார்.


தயா ரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதியுடன் SJB யும் கைகோர்க்க கூடும் என தெரிவித்தார்.


நேற்று கொழும்பில் SJB ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குறிய ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஏற்றுக்கொண்ட சஜித், கோட்டபாய ராஜபக்சவையும் இணைத்துக் கொள்வார் என சரத் பொன்சேகா கடுமையாக சாடினார். கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குறிய ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஏற்றுக்கொண்ட சஜித், கோட்டபாய ராஜபக்சவையும் இணைத்துக் கொள்வார் என சரத் பொன்சேகா கடுமையாக சாடினார். Reviewed by Madawala News on January 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.