உயிரிழந்த சனத் நிஷாந்த நேற்றிரவு திருமண வைபவத்தில் எடுத்த இறுதி செல்ஃபி இணையத்தில் வைரல்!
இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த சனத் நிஷாந்த நேற்றிரவு திருமண வைபவத்தில் எடுத்த இறுதி செல்ஃபி இணையத்தில் வைரல்! உயிரிழந்த சனத் நிஷாந்த நேற்றிரவு திருமண வைபவத்தில் எடுத்த இறுதி செல்ஃபி இணையத்தில் வைரல்! Reviewed by Madawala News on January 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.