தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேயங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.சிறிசோம ரணசிங்க (81) என்ற பெண் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்.

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து, உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அவர் நோய்வாய்ப்பட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களின் தீர்மானத்திற்கு அமைய அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், முதியோர் இல்லம் மீரிகம சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்கிடையில், இப்பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என உறவினர் ஒருவர் கம்பஹா பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திடீர் மரணங்கள் தொடர்பான விசாரணையாளர் துசித பிரமோத் விஜயவர்தனவுடன் பொலிஸ் குழுவொன்று தகன அறைக்கு வரவழைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ஹெட்டியாராச்சி மேற்கொண்டு வருகின்றார்.
தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Reviewed by Madawala News on January 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.