அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் ; டில்வின் சில்வாஅடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அல்ல, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தான் அறிவிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக அநுர திஸாநாயக்க தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பல சுயாதீன ஆய்வு அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுர திஸாநாயக்க ஜனாதிபதியானவுடன் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் ; டில்வின் சில்வா அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் ; டில்வின் சில்வா Reviewed by Madawala News on January 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.