முச்சக்கரவண்டியுடன் நீர்த்தேக்கத்துக்குள் விழுந்த இளைஞன் ; முச்சக்கர வண்டி ஒதுங்கியது - இளைஞன் மாயம்.உள்ஹிட்டிய ரத்கிந்த வீதியில் உள்ள உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இன்று (07) அதிகாலை 12.30 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றும் அதன் சாரதியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.ஹொபரிய, தேக்கவத்தை, கிராதுருகோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நபர் மற்றுமொரு நபருடன் அதிகாலையில் உள்ஹிட்டிய ரத்கிந்த வீதியில் ரத்கிந்த இரட்டை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியினூடாக பயணித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது அவரது நண்பர் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் 0.3 மீற்றர் வரை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளை கிராதுருகொட்டை பொலிஸாரும் அப் பகுதி மக்களும் இனைந்து மேற்கொண்டு வருகின்றனர்தேவையென்றால் கடற்படையின் உதவியைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி சுதேஷ் ரத்நாயக்க தெரிவித்தார்.


முச்சக்கரவண்டியுடன் நீர்த்தேக்கத்துக்குள் விழுந்த இளைஞன் ; முச்சக்கர வண்டி ஒதுங்கியது - இளைஞன் மாயம். முச்சக்கரவண்டியுடன் நீர்த்தேக்கத்துக்குள் விழுந்த இளைஞன் ;  முச்சக்கர வண்டி ஒதுங்கியது - இளைஞன் மாயம். Reviewed by Madawala News on January 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.