பெருந்தொகை பெறுமதியான அபின் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.

48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி
86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 லட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)
பெருந்தொகை பெறுமதியான அபின் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. பெருந்தொகை பெறுமதியான அபின் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. Reviewed by Madawala News on January 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.