இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் நடுவீதியில் வைத்து கொலை.ஹன்வெல்ல பஹத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

ஹன்வெல்ல பஹத்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் (14ம் திகதி) விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த விருந்தில் மது அருந்திக்கொண்டிருந்த இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தாக்கப்பட்ட நபர் ஒருவர் ஹோட்டலில் இருந்து வெளியே வருவது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அவர், அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கூரிய ஆயுதத்தை கொண்டு வருகிறார்.

பின்னர் அந்த கூரிய ஆயுதத்தால் மற்ற தரப்பினரை தாக்க முயற்சிக்கிறார்.

இதன்போது, அவர் பதில் தாக்குதலுக்கு உள்ளாகுவது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

படுகாயமடைந்தவர் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் நடுவீதியில் வைத்து கொலை. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் நடுவீதியில் வைத்து கொலை. Reviewed by Madawala News on January 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.