எமது வீட்டு வாயிலுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து எமது குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர். சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்டமை தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


கறுவாத்தோட்டப் பொலிஸார் நேற்று (ஜனவரி 08) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் குறித்த விசாரணைகள் தொடர்பில் அறிவித்துள்ளனர். 


சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் வீட்டு வாயிலுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து தமது குடும்பத்தை அவமானப்படுத்தியதாகக் கூறி கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பவித்ரா ரம்புக்வெல்ல தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார். 


சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பு 07 இல்லத்திற்கு அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளதாக நீதவானிடம் மேலும் தெரிவித்தனர். 

எமது வீட்டு வாயிலுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து எமது குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர். எமது  வீட்டு வாயிலுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து எமது குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர். Reviewed by Madawala News on January 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.