அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் பாரிய சிக்கல் ஏற்படும் ; அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்எதிர்வரும் ஐந்து வருடங்களில் சமூக ஊடக தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும் எனவும் மக்கள் இறைமையின் ஊடாக நியமிக்கப்படும் அரசாங்கத்தின் மீது சமூக ஊடகங்கள் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.


(23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எம்.பி., மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு இந்த கருவி பயன்படுத்தப்பட்டால் அதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டார்.


மக்கள் வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்தை தெரிவு செய்த பின்னர் அந்த அரசாங்கத்தை அவதூறாகப் பேசி மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மக்களின் இறையாண்மைக்கு சவால் விடுவார்களாயின் அது எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கட்டுப்பாடு மற்றும் அடக்குமுறை இரண்டு சூழ்நிலைகள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்களின் பேச்சு சுதந்திரத்தை பறிப்பதாக பல்வேறு நபர்களின் பொய் பிரசாரங்களுக்கு மக்கள் வீழ்ந்து விட வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

எலான் மஸ்க்கை அமெரிக்காவால்  கட்டுப்படுத்த முடியவில்லை .. அவர் இப்போது ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தை விட சக்திவாய்ந்தவராகிவிட்டார். 

அவரது சமூக ஊடக தளமான X தற்போது சமூகப் பாதைகளை மாற்றுவதில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது" என்று மேலும்  அரசாங்க தரப்பு  எம்.பி.,  இலங்கை ஏன் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துகிறது என்பதை நியாயப்படுத்தினார்.

Wait to load VIDEO
அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் பாரிய சிக்கல் ஏற்படும் ; அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் பாரிய சிக்கல் ஏற்படும் ; அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் Reviewed by Madawala News on January 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.