சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி, இரகசிய பொலிஸார் வசம் - விபத்து நடப்பதற்கு முன் 'தனது இறப்பு' குறித்து அவர் சமூக வலையில் பதிவுகட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிச் சென்ற சாரதியின் கையடக்கத் தொலைபேசியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைக்காக விசேட பொலிஸ் குழுவினால் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.

சாரதி எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் சாரதி தனது ‘ தனது இறப்பு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட குறிப்பினால் தொலைபேசி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


குறித்த சாரதி சமூக ஊடகங்களில் பதிவிட்ட குறிப்பு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி, இரகசிய பொலிஸார் வசம் - விபத்து நடப்பதற்கு முன் 'தனது இறப்பு' குறித்து அவர் சமூக வலையில் பதிவு சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி, இரகசிய பொலிஸார் வசம் -  விபத்து நடப்பதற்கு முன் 'தனது இறப்பு' குறித்து அவர் சமூக வலையில் பதிவு Reviewed by Madawala News on January 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.