மரக்கறிகளை விற்க முடியாத நிலை ஏற்படும் - ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கூட விற்க முடியாமல் போகும்.நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கொள்வனவு மற்றும் தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும், இதனால் மே மாதத்தின் பின்னர் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே
அருண சாந்த ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு, தற்போது நுவரெலியா பொருளாதார நிலையத்தில் விற்கப்படும் மரக்கறிகளின் விலையை பொருளாதார மத்திய நிலையம் தீர்மானிக்காது,


விவசாயிகள் நிர்ணயிக்கும் விலைக்கே பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்களால் மரக்கறிகளின் விலைகள் எடுக்கப்படுவதாக அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


தற்போது விலை உயர்ந்துள்ள அனைத்து மரக்கறிகளை மட்டுமே விவசாயிகள் பலர் பயிரிடத் துவங்கி விட்டதாகவும்,

ஒரு சில வகை காய்கறிகள் மட்டுமே அறுவடை செய்யப்படுவதால்,
எதிர்காலத்தில் மரக்கறி கையிருப்பு அதிகரித்து, அதனால் ஒரு கிலோ மரக்கறியை இருபது ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை
ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.
மரக்கறிகளை விற்க முடியாத நிலை ஏற்படும் - ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கூட விற்க முடியாமல் போகும். மரக்கறிகளை விற்க முடியாத நிலை ஏற்படும் - ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கூட விற்க முடியாமல் போகும். Reviewed by Madawala News on January 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.