அவசர இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள நிதி உதவி கோரும் சஹாப்தீன் சல்மாவுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் ( ஆவணங்கள் இணைப்பு) (பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மோதினார் ஒழுங்கை

சாவியா வீதி காத்தான்குடி-01இல் வசிக்கும் சஹாப்தீன் சல்மா வயது 55 என்பவர் கடந்த சில வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது இவருக்கு நோய் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக இவரைப் பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் இவருக்கு உடனடியாக இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவசரமாக அரசாங்க வைத்தியசலையில் குறித்த இருதய சத்திர சிகிச்சையை செய்ய முடியாத காரணத்தால் தனியார் வைத்தியசாலையில் மேற்படி சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு (1.6 மில்லியன்) 16 இலட்சம் ரூபா செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.


எனினும் இவருடைய கணவர் சாதாரண கூலித் தொழிலாளி என்பதால் இவ் இருதய சத்திர சிகிச்சைக்கான செலவினை ஈடுசெய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.


எனவே வசதிபடைத்த தனவந்தர்கள் இவரின் நோய் நிலைமையினை கருத்திற்கொண்டு தங்களால் முடிந்த பண உதவிகளை 

S SALMA BEEVI  

A/C: 92090618 

BANK OF CEYLON KATTANKUDY BRANCH 

(NIC : 686673553V) 

எனும் இலங்கை வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்புச் செய்யுமாறும் அல்லது குறித்த இருதய சத்திர சிகிச்சையை அவசரமாக மேற்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளையும்,சத்திர சிகிச்சைக்கான செலவுகளையும் தனவந்தர்களிடம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சஹாப்தீன் சல்மா கோரியுள்ளார்.

முடியுமான சகோதர,சகோதரிகள் உங்களால் முடிந்த பண உதவிகளை இவருக்கு செய்வதோடு மேலதிக விபரங்களுக்கு 0761195235 எனும் இத் தொலைபேசி இலக்கம் ஊடாக இவரை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு : இத்துடன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சஹாப்தீன் சல்மாவின் வைத்திய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.


அவசர இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள நிதி உதவி கோரும் சஹாப்தீன் சல்மாவுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் ( ஆவணங்கள் இணைப்பு) அவசர  இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள  நிதி உதவி கோரும் சஹாப்தீன் சல்மாவுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் ( ஆவணங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on January 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.