கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கு முன் மலர் வளையம் வைக்க முயற்சி.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக வைப்பதற்காக மலர் வளையமொன்றை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.


வைத்தியர் சமல் சஞ்ஜீவ மற்றும் சமூக செயற்பாட்டாளர் சஞ்ஜய மாவத்த உள்ளிட்ட சிலர், மலர் வளையத்தை எடுத்துக்கொண்டுச் சென்று, வீட்டின் படலையை தட்டியுள்ளனர். எனினும், அங்கு கடமையில் இருந்தவர்கள், படலையை திறக்கவில்லை. மலர் வளையத்தை வைப்பதற்கும் இடமளிக்கவில்லை.


எவ்வாறாயினும், அந்த சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த மலர் வளையத்தை வைக்கவிடாது தடுத்தனர்.

கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கு முன் மலர் வளையம் வைக்க முயற்சி. கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கு முன் மலர் வளையம் வைக்க முயற்சி. Reviewed by Madawala News on January 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.