இலங்கை இளைஞன் இங்கிலாந்தில் படுகொலை..இலங்கை இளைஞன் இங்கிலாந்தில் படுகொலை.. 
யாழ்ப்பாணம் காரைநகரை பூர்வீகமாக கொண்ட ஞானேஸ்வரன் அஜந்தன் என்ற 21 வயதான இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் ட்விகன்ஹாமில் உள்ள ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த திங்கட்கிழமை (8) நள்ளிரவு 11.50 மணியளவில், ஸ்ட்ராபெரி ஹில்லில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்பதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு ஆண்களும், 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.


சந்தேக நபர்களில் ஒருவரான, 16 வயது சிறுவன், கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அருகிலுள்ள குல்-டி-சாக்கில் காலில் காயத்துடன் கைது செய்யப்பட்டார்.


ஸ்கொட்லாந்து யார்ட் மற்றும் பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸாரின் துப்பறியும் நபர்கள் இரண்டு சம்பவங்களும் இணைக்கப்பட்டதாகக் கருதப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 20 வயதுடைய இருவர் மற்றும் 15 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது, விசாரணையில் 19 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இளைஞன் இங்கிலாந்தில் படுகொலை.. இலங்கை இளைஞன் இங்கிலாந்தில்  படுகொலை.. Reviewed by Madawala News on January 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.