ஆறு கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் மூவர் கைது



ஆறு கோடிக்கு மேல் பெறுமதியான கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் யால காட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,570 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கி ஒன்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 யால காட்டின் சுஹந்திரமாறு பிரதேசத்தில் 08 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள 4 ½ ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர்ச்செய்கையை பராமரித்து இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோனகனார பொலிஸார் மேற்கொள்வதாக இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஆறு கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் மூவர் கைது ஆறு கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் மூவர் கைது Reviewed by Madawala News on January 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.