ஜேர்மனியில் இருந்து அதிநவீன மெஷின்களை கொண்டுவந்து தங்கம் தேடிய வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது. அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  நவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உள்ளிட்ட மூவர், வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவை நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் ஸ்கேனர் ஆகும்.


தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷங்கள் மற்றும் தங்கத்தை தேடும் குழுவினர் தொடர்பில் வவுனியா பொலிஸ் விஷேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நவீன ஸ்கேனர், கார் மற்றும் வான் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் சுங்க வரியை மோசடி செய்து ஜேர்மனியில் இருந்து இரகசியமாக இந்த நவீன ஸ்கேனரை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து அதிநவீன மெஷின்களை கொண்டுவந்து தங்கம் தேடிய வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது. ஜேர்மனியில் இருந்து அதிநவீன மெஷின்களை கொண்டுவந்து தங்கம் தேடிய வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது. Reviewed by Madawala News on January 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.