ஹூதி போராளிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி.ஹவுதி போராளிகளுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி ஏமனில் நடத்தப்பட்டுள்ளது.


ஏமன் தலைநகர் சனாவில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது ஹூதி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்றது.


கடந்த வாரம், ஹூதிகளை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.

அது, செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹூதி போராளிகள் நடத்தும் தாக்குதல்களை வலியுறுத்துகிறது.

இதனால் ஹவுதி ஆதரவாளர்கள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஹவுதிகளின் ஆதரவாளர்கள் ஏமன் கொடி மற்றும் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏமனின் பெரும்பகுதி ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் இருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஹவுதி போராளிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், ஹவுதி தாக்குதல்களை எதிர்கொண்ட பெரும்பாலான கப்பல்கள் இஸ்ரேலுடன் எந்த உறவும் கொண்டிருக்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன .
ஹூதி போராளிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி. ஹூதி போராளிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி. Reviewed by Madawala News on January 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.