வீட்டில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 22 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றிய பொலிஸார்.வெளிநாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்திவரும் 'பட்டா மஞ்சு'வின் நெருங்கிய உறவினரின் வீட்டில் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நீதிமன்ற உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான சீடன்
'பட்ட மஞ்சு' எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


வீட்டில் உள்ள பதுங்கு குழியில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழு விசேட சோதனையின் போது கண்டுபிடித்ததாகவும், அந்த வீட்டில் ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் அவர்களின் ஊடாக புழக்கத்தில் விடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட பெண் வன்னி கெஹல்பெத்தர பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


போதைப்பொருள் வலையமைப்பை வெளிக்கொணரும் வகையில் சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீட்டில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 22 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றிய பொலிஸார். வீட்டில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 22 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றிய பொலிஸார். Reviewed by Madawala News on January 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.