மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடிய நபருக்கு வலைவீச்சு - #சிலாபம் - புத்தளம் வீதிபொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற போது, ​​அதில் பயணித்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடியதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (6) இரவு 10.45 மணியளவில் சிலாபம் - புத்தளம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

பின்னர், அவர் சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளார்.

சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடிய நபருக்கு வலைவீச்சு - #சிலாபம் - புத்தளம் வீதி மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடிய நபருக்கு வலைவீச்சு -  #சிலாபம் - புத்தளம் வீதி Reviewed by Madawala News on January 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.