தாயுடன் தொடர்பை பேணிய நபர் இரு மகள்மாரை துஷ்பிரயோகம் செய்ததால் பொலிஸாரால் கைது.களுத்துறையில் தாயுடன் தொடர்பை பேணிய நபரால் இரு மகள்மார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இரு சிறுமிகளின் தாய் வேரொரு நபருடன் தொடர்பை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சுகயீனம் காரணமாக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தாயுடன் தொடர்பை பேணிய நபரே இரு சிறுமிகளையும் அவர்களின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
தாயுடன் தொடர்பை பேணிய நபர் இரு மகள்மாரை துஷ்பிரயோகம் செய்ததால் பொலிஸாரால் கைது. தாயுடன் தொடர்பை பேணிய நபர் இரு மகள்மாரை துஷ்பிரயோகம் செய்ததால் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on January 13, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.