அல்கொய்தா அமைப்புக்கு உதவிய தந்தை, மகன் உள்ளிட்ட நால்வருக்கு சிவப்பு பிடியாணை!அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று ஆங்கிலத்தில் சிவப்பு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.


பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் இந்த சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாக கூறப்படும் கலேலிய, கலகெடி ஹென்வெல பிரதேசங்களை சேர்ந்த தந்தை மற்றும் மகன் மற்றும் இருவருக்கு எதிராகவே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, அஹமட் கலீல் லுக்மான் தாலிப், அஹ்மான் லுக்மன்ட் ஹலீன், அப்துல் பஹின் மொஹமட் லெப்பே மற்றும் மொஹமட் பாஹிர் ரிப்பன் ஆகிய நால்வருக்கு எதிராகவே சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது


இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் 16 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கைப் பதிவு செய்தனர்.


அல்கொய்தா அமைப்புக்கு உதவிய தந்தை, மகன் உள்ளிட்ட நால்வருக்கு சிவப்பு பிடியாணை! அல்கொய்தா அமைப்புக்கு உதவிய தந்தை, மகன் உள்ளிட்ட நால்வருக்கு சிவப்பு பிடியாணை! Reviewed by Madawala News on January 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.