திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை முதலை இழுத்து சென்றது. தமிழ் கைதியொருவர் முதலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோதும் பெரும் முயற்சியை அடுத்து காப்பாற்றப்பட்டுள்ளார்.   


அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ் கைதி ஒருவர் முதலையால்  தாக்கப்பட்டுள்ளார்.


சிறைச்சாலைப் பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் குறித்த கைதியும் இன்னும் சில கைதிகளும்,  பயிர்ச் செய்கைகளில் செவ்வாய்க்கிழமை (23) ஈடுபட்டிருந்த போது மூங்கில் புதருக்குள் மறைந்திருந்த முதலை ஒன்று கைதியின் காலைப் பிடித்து மல்வத்து ஓயாவுக்கு இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .


முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒரு கை, கால் மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்து கைதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு    சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


மல் அத்து ஓயாவில் நீராடச் சென்ற கைதியை முதலை தாக்கியதாக கிடைத்த தகவலை மறுத்த சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பயிர்ச்செய்கையில் திங்கட்கிழமை (22) மாலை ஈடுபட்டிருந்த போதே இந்த முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்றார்.

திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை முதலை இழுத்து சென்றது. திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை முதலை இழுத்து சென்றது. Reviewed by Madawala News on January 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.