டிலிவரி Bag மூலம் சூட்சுமமாக ஐஸ் கடத்தி விநியோகித்தவர் சிக்கினார் .பொருட்களை விநியோகம் செய்யும் சேவை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் போர்வையில் போதைப்பொருள் கடத்திய ஒருவர் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


யுக்திய   நடவடிக்கையின் கீழ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அதன் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் எடரமுல்லை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்துள்ளது.


கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 332 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 97 எம்எம் 9X9 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவர் டுபாயில் தங்கியிருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகளுக்கு பொறுப்பான களுத்துறை தினேஷ் ஷியமந்த டி சில்வா அல்லது "பாபி" என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

டிலிவரி Bag மூலம் சூட்சுமமாக ஐஸ் கடத்தி விநியோகித்தவர் சிக்கினார் . டிலிவரி Bag மூலம் சூட்சுமமாக ஐஸ் கடத்தி விநியோகித்தவர் சிக்கினார் . Reviewed by Madawala News on January 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.