6 பேருடன் இலங்கையின் மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.6 பணியாளர்களுடன் இருந்த இலங்கையின் மீன்பிடி இழுவை படகு, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

திணைக்களத்தின் பேச்சாளரின் கூற்றுப்படி, மீன்பிடி இழுவைப்படகு, இலங்கை மீனவர்களுடன் அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிலாபம் திகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி ‘லொரென்சோ புத்தா - 4’ என்ற மீன்பிடி இழுவை படகு புறப்பட்டுச் சென்றது.

இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல் மைல் தொலைவில் இந்த கடத்தல் நடந்துள்ளது.

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 பேருடன் இலங்கையின் மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது. 6 பேருடன் இலங்கையின் மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது. Reviewed by Madawala News on January 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.