இலங்கையில் ஒரேஞ்ச் ஜுஸ் ஒன்று 6075 ரூபா ? சமூக வலைதளங்களில் வைரலாகும் விலைபட்டியல்.இலங்கையின் முன்னணி விருந்தகம் ஒன்றில் தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபாய் என்று விடயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

எனினும் பிரசுரிக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் சீட்டு உண்மையானதா என்பதை விருந்தகம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை.

குறித்த கட்டண சீட்டில் விருந்தகம் ஒரு வாடிக்கையாளரிடம் தோடம்பழச்சாறுக்காக 6, 075 ரூபாயை கட்டணமாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த கட்டணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் வரி 1,055.80 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி தோடம்பழச்சாறு விலை, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய வரி இல்லாமல் 4,565 ரூபாயாகும்.

இந்தநிலையில், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக இலங்கையில் உள்ள விருந்தகங்கள், பல பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரேஞ்ச் ஜுஸ் ஒன்று 6075 ரூபா ? சமூக வலைதளங்களில் வைரலாகும் விலைபட்டியல். இலங்கையில் ஒரேஞ்ச் ஜுஸ் ஒன்று 6075 ரூபா ? சமூக வலைதளங்களில் வைரலாகும் விலைபட்டியல். Reviewed by Madawala News on January 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.