பெட்ரோல் மற்றும் டீசல் 5 ரூபா அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.

சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்துள்ளது.அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.அத்தோடு ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Petrol 92 increased by Rs.5 per litre to Rs.371


Octane 95 reduced by Rs.08 to Rs.456


Auto Diesel increased by Rs.5 to Rs.363


Super Diesel reduced by Rs.07 to Rs.468


Kerosene increased by Rs.26 to Rs.262
பெட்ரோல் மற்றும் டீசல் 5 ரூபா அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் 5 ரூபா அதிகரிக்கப்பட்டது. Reviewed by Madawala News on January 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.