வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணி போராட்டம். வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (10) காலை 8.00 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணி தீர்மானித்துள்ளது.


இந்த வேலை நிறுத்தத்தில் 10 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.


எவ்வாறாயினும், சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி மற்றும் மனநல நிறுவனம் போன்றவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மருத்துவர்களுக்கான 'போக்குவரத்து மற்றும் அசையாமை கொடுப்பனவு' அல்லது டேட் கொடுப்பனவை ரூ.35,000 ஆக உயர்த்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை மருத்துவ வல்லுனர்கள் நேற்று அரசு மருத்துவமனைகளில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணி போராட்டம். வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணி போராட்டம். Reviewed by Madawala News on January 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.