கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 162 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் 11 நபர்களும்..தெற்கு கடலில் இன்று (20) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் கடற்படையினர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு விளக்கமளித்துள்ளனர்.

1,626 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 65 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கையிருப்பு இதன்போது கைப்பற்றப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


100 கடல் மைல் (சுமார் 185 கி.மீ) தொலைவில் உள்ள தெற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 03 பைகளில் 65 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இந்நாட்டு பல நாள் மீன்பிடிப்படகொன்றும் மற்றும் இதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக 11 சந்தேக நபர்களும் 65 கிலோ போதைப் பொருட்களும் இன்று (20) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 162 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் 11 நபர்களும்.. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 162 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் 11 நபர்களும்.. Reviewed by Madawala News on January 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.