முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முக்கிய பதவிகள் ; நாமல் தெரிவிப்புஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்."பசில் ராஜபக்ச ஒரு நிறுவனராக கட்சி அமைப்பு பணிகளை செய்கிறார். அதனால் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக விடுவது என அவரும் கட்சியினரும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.எதிர்காலத்தில் நாம் எடுக்கும் அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் அதற்குத் தேவையான ஒருவரை நியமிப்போம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதுடன், புதிய பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டார்.

இதேவேளை மேலும் இரண்டு பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, புதிதாக உருவாக்கப்படவுள்ள இரண்டு பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளையும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உறுப்பினர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முக்கிய பதவிகள் ; நாமல் தெரிவிப்பு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முக்கிய பதவிகள் ; நாமல் தெரிவிப்பு Reviewed by Madawala News on December 16, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.