VIDEO - தனது சொந்த மகளின் நிர்வாண புகைப்படத்தை தன் Youtube சேனல் உள்ளிட்ட இணையத்தில் பதிவேற்றி பணம் சம்பாதிக்க முயற்சித்த கணவன், மனைவியால் வெட்டிக் கொலை #இலங்கை



வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகஹகம பிரதேசத்தில் வீடொன்றிற்குள் மனைவி தனது கணவனை கூரிய ஆயுதத்தால் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப் படங்களை YOUTUBE சேனலில் பிரசுரித்தும் அதனை இணையத்தில் விற்று பணம் சம்பாரிக்க முயற்சித்த போதே அந்த நபர் மனைவியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.


இவர் தொடர்ந்தும் மகளின் நிர்வான படம் வேண்டும் என மனைவியுடன் சண்டை பிடித்து வந்துள்ளார்.


அவ்வாறு தனக்கு நிர்வான புகைப்படத்தை தந்தால் இணையத்தில் பதிவேற்றி 6 இலட்சம் ரூபா பணம் பெற முடியும் என தெரிவித்து சண்டை பிடித்து வந்த நிலையில் மனைவியால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார்.


வெள்ளவ பலகஹகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது 14 வயது மகளையும் 9 வயது மகனையும் வீட்டின் அறையொன்றில் பாதுகாப்பாக பூட்டி வைத்துவிட்டு கணவனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


குறித்த சந்தேகநபர் குளியலறைக்குச் சென்ற கணவரின் கண்களில் மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு, குளியலறையில் இருந்து வெளியே வந்த அவரை வெட்டிக் கொன்றுள்ளார்.


அந்தத் தாக்குதலால் அவர் வீட்டின் வரவேற்பறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த நபர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதனை பிரபலப்படுத்தும் நோக்கில் பெண்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
VIDEO - தனது சொந்த மகளின் நிர்வாண புகைப்படத்தை தன் Youtube சேனல் உள்ளிட்ட இணையத்தில் பதிவேற்றி பணம் சம்பாதிக்க முயற்சித்த கணவன், மனைவியால் வெட்டிக் கொலை #இலங்கை VIDEO - தனது சொந்த மகளின் நிர்வாண புகைப்படத்தை தன் Youtube சேனல் உள்ளிட்ட இணையத்தில் பதிவேற்றி பணம் சம்பாதிக்க முயற்சித்த கணவன்,  மனைவியால் வெட்டிக் கொலை #இலங்கை Reviewed by Madawala News on December 04, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.