சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு.வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை சீன அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் முன்னதாக, அப்பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறியது.

நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் லான்ஜோவிலிருந்து மேற்கு-தென்மேற்காக 102 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்படி நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு. Reviewed by Madawala News on December 19, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.