நான் கனடாவில் வசிப்பவர், நான் ஒரு என்ஜினியர் - பொய்களை வாரி இறைத்து கொழும்பு பிரதேச பெண்ணை மில்லியன் கணக்கில் ஏமாற்றிய நபர்.ஹோமாகம பிரதேசத்தில் திருமணம் செய்வதாக கூறி யுவதி ஒருவரை ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஹோமாகம, கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் தன்னை ஒரு மென்பொருள் பொறியியலாளர் என்றும் கனடாவில் வசிப்பவர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார்.


குறித்த நபரின் வங்கி பரிவர்த்தனைகளுக்காக தான் வங்கிக் கணக்கைத் தொடங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.


அத்துடன் தனது தாயார் தான் வாங்கிய இரண்டு மாடி வீட்டில் குறித்த நபரை தங்க அனுமதித்துள்ளார்.


இதற்கிடையில், அவர் பல சந்தர்ப்பங்களில் பெண்ணிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பொய்யான காரணங்களின் கீழ் கடனாக பெற்றுள்ளார்.

சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது மனைவியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க தலையில் போலி முடி அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான் கனடாவில் வசிப்பவர், நான் ஒரு என்ஜினியர் - பொய்களை வாரி இறைத்து கொழும்பு பிரதேச பெண்ணை மில்லியன் கணக்கில் ஏமாற்றிய நபர். நான் கனடாவில் வசிப்பவர், நான் ஒரு என்ஜினியர் - பொய்களை வாரி இறைத்து கொழும்பு பிரதேச  பெண்ணை மில்லியன் கணக்கில் ஏமாற்றிய நபர். Reviewed by Madawala News on December 29, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.