யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனம் வீதியை விட்டு விலகி பஸ் தரிப்பில் காத்திருந்தவர்களை மோதியது - ஒருவர் பலி, பலர் காயம்கம்பஹாவில் இருந்து
யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனம் ஒன்று விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (24-12-2023) அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.


கம்பஹா பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி பேருந்துக்காக காத்திருந்த ஒருவரை மோதியுள்ளது.


இந்த விபத்தில் கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக பேருந்து தறிப்படத்தில் காத்திருந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கல்லாசிய கொடவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான டி. ஏ சந்துன் தினேஷ் ஜெயக்கொடி என தெரியவந்துள்ளது.
யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனம் வீதியை விட்டு விலகி பஸ் தரிப்பில் காத்திருந்தவர்களை மோதியது - ஒருவர் பலி, பலர் காயம் யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனம்  வீதியை விட்டு விலகி பஸ் தரிப்பில் காத்திருந்தவர்களை மோதியது - ஒருவர் பலி, பலர் காயம் Reviewed by Madawala News on December 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.