நுளம்புகளை விரட்ட முயற்சித்தவர் மரணம். எம். றொசாந்த் 

நுளம்புகளை விரட்டுவதற்காக புகை போட முற்பட்டவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 


யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். 


கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட , புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார். அதன் போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 


அந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (26) உயிரிழந்துள்ளார்

நுளம்புகளை விரட்ட முயற்சித்தவர் மரணம். நுளம்புகளை விரட்ட முயற்சித்தவர் மரணம். Reviewed by Madawala News on December 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.