முஸம்மில் எம்.பி யின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரின் துப்பாக்கி, தோட்டா, பாதுகாப்பு பிரிவின் உடை திருட்டு. புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் பஸ் நிலைய வேலிக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பயணப் பையை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவராவார்.


விசாரணையில் கைத்துப்பாக்கி , தோட்டாக்கள், பொலிஸ் உடைகள் , அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உடை, உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் மேலும் சில பொருட்கள் கிருலப்பனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஸம்மில் எம்.பி யின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரின் துப்பாக்கி, தோட்டா, பாதுகாப்பு பிரிவின் உடை திருட்டு. முஸம்மில் எம்.பி யின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரின்  துப்பாக்கி, தோட்டா, பாதுகாப்பு பிரிவின் உடை  திருட்டு. Reviewed by Madawala News on December 21, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.