எட்டியாந்தோட்டை, பகல கராகொடை அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. எட்டியாந்தோட்டை, பகல கராகொடை அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மத்ரஸா கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறிச்செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் என்பன இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.


15 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வரும் இம்மத்ரஸா பகுதி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, மாணவர்களின் ஒழுக்கம், வணக்க வழிபாடுகள், இதர முன்மாதிரி மிக்க செயற்பாடுகளில் இம்மத்ரஸா முக்கிய பங்காற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய நிகழ்வில் விசேட அதிதியாக அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் மதனியும், சிறப்பதிதியாக எட்டியந்தோட்டை, காராகொடை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் அதிபர் A.S.M. பாஹிம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


அத்தோடு ஊரின் முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள், மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவ மாணவிகள் என பலரின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்ற இன்றைய நிகழ்வுகள், மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்க் A.K. முஹம்மத் அவர்களின் வழிகாட்டலுடனும் நெறிப்படுத்தலுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.
எட்டியாந்தோட்டை, பகல கராகொடை அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. எட்டியாந்தோட்டை, பகல கராகொடை அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on December 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.