மக்கள் முட்டை கொள்வனவை குறைத்துள்ளதால் அதிகளவான முட்டைகள் தேங்கி உள்ளன... இதனால் முட்டை விலை கனிசமான அளவு குறைவடையும் ; முட்டை வர்த்தகர்கள் சங்கம்.சந்தையில் முட்டை விலை மேலும் குறைவடையக் கூடுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகளவான முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படாமல் பண்ணைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் உயர்வடைந்திருந்த முட்டையின் விலை தற்போது நாட்டின் பல பகுதிகளில் 50 முதல் 52 ரூபாய் வரையில் குறைவடைந்துள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் முட்டையில் விலை 30 முதல் 40 ரூபாய் வரையில் மேலும் குறையக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் முட்டை கொள்வனவை குறைத்துள்ளதால் அதிகளவான முட்டைகள் தேங்கி உள்ளன... இதனால் முட்டை விலை கனிசமான அளவு குறைவடையும் ; முட்டை வர்த்தகர்கள் சங்கம். மக்கள் முட்டை கொள்வனவை குறைத்துள்ளதால் அதிகளவான முட்டைகள் தேங்கி உள்ளன... இதனால் முட்டை விலை கனிசமான அளவு குறைவடையும் ; முட்டை வர்த்தகர்கள் சங்கம். Reviewed by Madawala News on December 20, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.