ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு வழங்கி விடுவித்தது.ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச கட்டளையின் படி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது,


இந்த இலங்கைக் கைதிகள் டிசம்பர் 02 அன்று வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52 வது தேசிய தினத்தின் போது அரச உத்தரவின் மூலம் மன்னிப்பு பெற்றனர்.

அரச மன்னிப்பைப் பெற்ற இந்த நாற்பத்து நான்கு இலங்கையர்கள் உரிய காலத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அரசினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன, இந்த இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு தனது நன்றிகளை
தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு வழங்கி விடுவித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு வழங்கி விடுவித்தது. Reviewed by Madawala News on December 30, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.