ஐஸ் அடித்தபடி போதையுடன் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்.கடமை நேரத்தில் ஐஸ் ரக போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


பல்லம காவல்நிலையத்தில் கடமையாற்றிவந்த குறித்த கான்ஸ்டபிளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டமையினால் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி அவரை பரிசோதனைகளுக்காக பல்லம காவல்துறையினர் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்போது, குறித்த கான்ஸ்டபிள் ஐஸ் ரக போதைப்பொருளை; பயன்படுத்தியுள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின்படி, சந்தேகநபரான கான்ஸ்டபிள் புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய, பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் அடித்தபடி போதையுடன் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம். ஐஸ் அடித்தபடி போதையுடன் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம். Reviewed by Madawala News on December 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.