பராமரிப்பு வேலைகளுக்காக திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளை நிறுத்துமாறு மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு - அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக வந்த முறைப்பாடுகளுக்கு முற்றுபப்புள்ளி வைக்க முடிவுஅத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சார திட்டங்களையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.பராமரிப்புப் பணிகளுக்காக அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக மின் நுகர்வோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்த பின்னரே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.வார இறுதி நாட்களில் பராமரிப்புக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளை அமைச்சு அவதானித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபைக்கு அதிக நேரக் கொடுப்பனவுகளுக்காக பெரும் தொகை செலவாவதாகவும் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறைக் காலங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பராமரிப்பு வேலைகளுக்காக திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளை நிறுத்துமாறு மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு - அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக வந்த முறைப்பாடுகளுக்கு முற்றுபப்புள்ளி வைக்க முடிவு பராமரிப்பு வேலைகளுக்காக  திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளை நிறுத்துமாறு மின்சக்தி அமைச்சர்  அறிவிப்பு - அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக வந்த முறைப்பாடுகளுக்கு முற்றுபப்புள்ளி வைக்க முடிவு Reviewed by Madawala News on December 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.