இலங்கையின் மத்ரஸாக்களில் தற்போதய நிலையும், முன்னேற்றுவதற்கான வழிமுறைகளும்.இலங்கையின் மத்ரஸாக்களில் தற்போதய நிலையும், முன்னேற்றுவதற்கான வழிமுறைகளும்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1989/1990 கலைப்பிரிவில் கல்வி கற்ற சமூக ஆர்வளர்கள் சிலரால் இந்த தொகுப்பானது சமூக பொறுப்பு, சமூகப் கடமை, மற்றும் சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

முதலில் சாய்ந்தமருது மத்ரஸாவில் 2023 ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் நடைபெற்ற ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கின்றோம்.      

                                                                                                                                                                                                 நாட்டில் ஒரு சில சிறந்த மத்ரஸாக்களும், பக்குவப்பட்ட – பன்பட்ட சில மதரஸா அதிபர்களும், ஆசிரியர்களும் காணப்பட, அனேகமான மத்ரஸாக்களை முன்னேற்றுவதற்கான தேவை இருந்கொண்டே வருவதை அவதானிக்க முடிகின்றது.

 அந்தவகையில் மத்ரஸாக்களை செம்மைப்படுத்தல் தேவையும், திருத்தம் வேண்டிநிற்கும் அம்சங்களை உள்வாங்களும், காலத்தின் தேவை கருதி உடனடியாக பார்க்கப்பட வேண்டிய கடப்பாடும் உள்ளதாக தெரிகின்றது. 

அந்தவகையில் எம்மால் உள்வாங்கப்பட்ட விடயங்களை ஆழமாக கருத்தில் கொண்டு இத்தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. 

இலங்கையின் முஸ்லிம்களில் வரலாற்றில் மத்ரஸாக்கள் மார்க்கக் கல்வியினை வழங்குவதில்  முக்கிய இடம் வகித்து வருகின்றன.

 மத்ரஸாக்களின் முக்கிய பணி மாணவர்களைப்  பூரணமான ஒரு மனிதனாக உருவாக்குவதும், அவர்களின் நற்பண்புகளை வளர்த்தலுமாகும்.

 இஸ்லாத்தில் அறிவு (இல்ம்) என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்திற்கோ, பாடத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அறிவு என்பது வாழ்க்கையின் பல விடயங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுவது முக்கியமாகும். 

அறிவு என்பது ஆன்மீகம், மதம், கலாச்சாரம், சமூகம், அரசியல், விஞ்ஞானம், எனப்பல விடயங்களையும் சார்ந்ததாக அமைகின்றது, மனிதனின் அபிவிருத்திக்கான அறிவு என்பது நிச்சயமாக முக்கியமானது.

 வெறுமனே மனப்பாடம் செய்தலோ, அதனை ஒப்பிப்பதோ மாத்திரம் இஸ்லாமிய அறிவாகாது.

 பாரம்பரிய அணுகுமுறைகளைப் பின்பற்றும் சில மத்ரஸாக்கள், சமகாலத்துடன் ஒப்பிடும்; போது சமூகத்திற்கு வழங்க வேண்டிய முக்கியமான  அறிவுசார் பணிகளில் இருந்து விலகியனவாகக் காணப்படுகின்றன.

 அவை உரிய முறையில் கவனிக்கப்படாத பட்சத்தில், சமூகத்திற்குப் பொருந்தாத அமைப்புக்களாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படக்கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது.                                                                                                                                                                            
                                                                                                                                                                                  இலங்கையைப் பொருத்த வரை, மத்ரஸாக்களில் எண்ணிக்கை, அவற்றில் கல்வி கற்கும் மாணவர்களில் எண்ணிக்கை மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை என்பன அண்மைக்காலங்களில் மிக விரைவாக அதிகரித்து வந்தாலும், அவற்றின் தரம், பாடத்திட்ட ஒழுங்கு, கற்கைக் காலம், கொள்கைகள் சார்ந்த எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், மாணவர்களை உள்வாங்கும் வயது, ஆசிரியர்களின்  கல்வித்தகைமை, மாணவர்களுக்கான தண்டணைப் போக்கு என்பன பெரியளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றதுடன் குறிப்பாக தண்டனை முறைகளும், சில மத்ரஸா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது நடவடிக்கைகளும் இஸ்லாமிய ஒழுக்க நெறிக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளன. 


அரச பாடசாலைகளுக்கு சென்று படிக்க வேண்டிய, விளையாடித்திரிய வேண்டிய வயதில் உள்ள இளம் பிள்ளைகளை பெற்றார்கள் தங்களது விருப்பதற்திற்கு மத்ரஸாக்களில் சேர்த்து விடுகின்றனர்.

 மத்ரஸாக்களில் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளும், அசாதாரண தண்டனைகளும், கடுமையான போக்கும், போசாக்கற்ற உணவு முறையும், தனிமைப்படுத்தலும், கடுமையான சொற்பிரயோகங்களும் பயன்படுத்தப்படும் நிலையும் காணப்படுகின்றன.

 இதனால் பிள்ளைகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட காரணமாகின்றனர்.

 மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும், பின்தங்கிய கிராமியப் பிரதேச தாய் தந்தையர் தமது அறியாமை காரணமாக தமது இளம் பிஞ்சுகளை மேற்குறிப்பிட்டவாறான மத்ரஸாக்களில் சேர்த்து வருகின்றனர் என்பதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். 


கொள்கைகள் சார்ந்த வேறுபாடுகள், விடாப்பிடியான - கடுமையான போக்குகள், கடுமையான தண்டணை முறைகள், தர்க்கங்கள், நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதிக்காக சில மத்ரஸா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது போக்குகள்; மற்றும் தன்மைகள் போன்றன மத்ரஸா மாணவர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து, அவர்கள் பட்டம் பெற்று வெளியாகி சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் போது சமூகத்தில் கொள்கை ரீதியான பிளவுகள், சச்சரவுகள் ஏற்பட காரணமாகின்றன. 


 *மத்ரஸாக்களை முன்னேற்றுவதற்கான சில வழிமுறைகள்* 

பல்கலைக்கழக துறை சார்ந்த பேராசிரியர்கள், முஸ்லிம் சமய கலதச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் தலைமை அங்கத்தவர்கள் மற்றும் ஜம்மியதுல் உலமாவின் சமூக சீர்திருத்த பிரிவின் அங்கத்தவர்கள் ஒன்று சேர்ந்து பின்வரும் சில விடயங்களில் கவனம் செலுத்தலாம்:

 *பாடத்திட்டம்* 

நாட்டின் சகல மத்ரஸாக்களுக்கும் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை சமூக மேம்பாடு, ஒற்றுமையையும் கருத்திற் கொண்டு வடிவமைத்தல்.

பல தசாப்தங்கள் பழமையான மத்ரஸா பாடத்திட்டத்துடன் சமூக மற்றும் இயற்கை விஞ்ஞான பாடங்கள், ஆங்கில – சிங்கள மொழிகள், தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப கற்கைள் சம கால தேவை கருதி உள்ளடக்க வேண்டும். 


இஸ்லாமும் நவீன விஞ்ஞானமும் ஒன்றாகக் கற்பிக்கப்படக்கூடியனவல்ல என்ற கருத்து மாற்றப்படல் வேண்டும்.

க.பொ.த. சாதாரண தரத்திற்கு பின்னர் அல்லது தரம் 10 இணை மாணவர்கள் பாடசாலைகளில் பூர்த்தி செய்த பின்னர் மத்ரஸாக்களுக்கு உள்வாங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு விளையாடுவதற்கு, பத்திரிகை வாசிப்பதற்கு, தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.

வருடம் ஒரு முறை விளையாட்டுப் போட்டியும், கல்விச் சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்ய வேண்டும். 

வாகன ஓட்டுதல் பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். 

மாணவர் மன்றம் மற்றும் கலை நிகழ்ச்சியகள் ஏற்பாடு செய்ய வேண்டும். 

பொது அறிவு, உளச்சார்பு தொடர்பான விடயங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

 இது மாணவர்களுக்கு போட்டிப்பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க வாய்ப்பாக அமையும். 

மாணவர்களுக்கான பரீட்சைகள் முஸ்லிம் சமய கலதச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு மதிப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.


மத்ரஸாக்களில் இருந்து வெளியேரும் மாணவர்களுக்கு வெளியே சென்றாலும் ஒரு தொழிலைச் செய்யக்கூடிய அளவுக்கு தொழில் சார் வழிகாட்டல்களும் வழங்கப்படல் வேண்டும்.


மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.

 *அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாகம்* 

மத்ரஸா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்வாங்கப்படுவதற்கு முஸ்லிம் சமய கலதச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் விளம்பரப்படுத்தப்பட்டு, நேர்முகப்பரீட்சையின் பின்னர் உரிய தகைமைகளின் அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். 

மத்ரஸா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது கடுமையான போக்குகள், தண்டணை முறைகள் முழுமையாக தவிர்க்கப்பட வழிவகை செய்ய வேண்டும். 

மத்ரஸா அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொருத்தமான பயிற்சிகள் காலத்திற்குக் காலம் வழங்கப்படல் வேண்டும். 

நவீன கற்பித்தல் முறைகளi அவர்கள் அறிந்திருத்தல் வேண்டும். 

மத்ரஸாக்களில் கல்வி போதிக்ககூடிய ஆசிரியர்களின் கல்வித்தராதரம் அதிகரிக்கப்பட வேண்டும்.

கற்பித்தல் முறைமை, மாணவர் உளவியல், கல்விக் கோட்பாடுகள் பற்றிய தெளிவோடு ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படல் வேண்டும். 

குறித்த மத்ரஸாக்களில் பயின்றுவிட்டு அதே மத்ரஸாக்களில் தகுதி இன்றிப் பணியாற்றல் தவிர்க்கப்படல் வேண்டும்.

மத்ரஸா நிர்வாகம் சிறந்த முறையில் இருக்க சிறந்த தலைமைத்துவம் இன்றியமையாதது.

மத்ரஸாக்களில் நிதி விடயங்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். 

மாணவர் தங்குமிட வசதிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படல் வேண்டும்.

பெற்றோர், மாணவர்கள், மற்றும்  ஊர்;ப்பள்ளி வாசல் நிர்வாகத்துடன் சிறந்த தொடர்புகளைப் பேண வாய்ப்புக்களை உருவாக்குதல்.


 *முஸ்லிம் காலச்சாரத்திணைக்களம்* 

மத்ரஸாக்களின் பாட விதானத்தை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களைக் கவனத்திற் கொண்டு தயாரித்தல்.

மத்ரஸா அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளைத் தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டலை வழங்குதல்.

மத்ரஸா அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நிர்வாகிககளுக்கும் பொருத்தமான பயிற்சிகளைக் காலத்திற்குக் காலம் வழங்குதல்.

மத்ரஸாக்களில் வழங்கப்படும் சான்றிதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரத்தையும், வழங்கக் கூடியதாக அமைவதை உறுதிப்படுத்துதல். 

பதிவு செய்யப்படாத மத்ரஸாக்கள் அங்கொன்று இங்கொன்றாக உருவாக்கப்படல் தவிர்த்தல்.

சிறந்த மத்ரஸா அதிபர்களும், ஆசிரியர்களும்  உற்சாகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படல்.

குற்றமிழைக்கும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கான வழி வகைகளைச் செய்தல்.


 *பெற்றோர்* 

பிள்ளைகளை 
மத்ரஸாக்களுக்கு அனுப்புவதன் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக அறிந்திருத்தல்.

மத்ரஸாக்களின் பாடத்திட்டம், ஆசிரியர்கள், சூழல் பற்றிய சிறந்த தெளிவைப்பெற்றிருத்தல்.


மத்ரஸாக்களில் இடம்பெறும் பிரச்சினைகளை சரியான முறையில் கையாழும் முறைகளை அறிந்திருத்தல்.

மத்ரஸாக்களில் பயிலும் தமது பிள்ளை, மற்றும் ஏனைய பிள்ளைகள் பெ ற்றோர்களுடன் சிறந்த தொடர்புகளைப் பேணல்.

Article by :
1989/ 90 Batch
University of Peradeniya
Srilanka
இலங்கையின் மத்ரஸாக்களில் தற்போதய நிலையும், முன்னேற்றுவதற்கான வழிமுறைகளும். இலங்கையின் மத்ரஸாக்களில் தற்போதய நிலையும், முன்னேற்றுவதற்கான வழிமுறைகளும். Reviewed by Madawala News on December 17, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.