பெருந்தொகையான வெங்காயம் மறைத்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை சுற்றி வளைக்கப்பட்டது . இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில், பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை  தெரிவிக்கிறது.


அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்பு தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.


இதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக மாத்தளை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகார சபையின் தலைவர் திரு.ரேணுகா குமார தெரிவித்தார்.


இதேவேளை, உள்ளுர் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய நிலை காணப்பட்ட போதிலும், உள்ளுர் உற்பத்தியாளர்கள் முட்டைகளை மறைத்து வைத்து பயன்பெறுவதாக அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார தெரிவித்தார்.

பெருந்தொகையான வெங்காயம் மறைத்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை சுற்றி வளைக்கப்பட்டது . பெருந்தொகையான  வெங்காயம்  மறைத்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை சுற்றி வளைக்கப்பட்டது . Reviewed by Madawala News on December 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.