பொலிஸாரை கண்டு போதைப் பொருளுடன் வீட்டுக்குள் இருந்து தப்பியோடிய 'லக்ஷபதியே தம்ம' கைது.சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றை சோதனையிடச் சென்ற போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவை, ஜூபிலி வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (21) மொரட்டுவை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸார் வீட்டின் முன் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்தவுடன், சந்தேக நபர் வீட்டின் பின் கதவில் இருந்து ஒரு பையுடன் தப்பி ஓட முயன்றார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்து சோதனையிட்ட போது, ​​அவரது பையில் 2,500 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

30 வயதுடைய தம்மிக்க பிரியங்கர என அழைக்கப்படும் 'லக்ஷபதியே தம்ம' என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பு செய்த பின்னர், போதை மாத்திரைகள் தேவைப்படுபவர்கள், அவர்கள் சொல்லும் இடத்தில் விட்டுச் செல்வதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​இந்த மாத்திரைகள் பாடசாலை தொடர்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

போதைக்கு அடிமையானவர்கள் இந்த மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரை கண்டு போதைப் பொருளுடன் வீட்டுக்குள் இருந்து தப்பியோடிய 'லக்ஷபதியே தம்ம' கைது. பொலிஸாரை கண்டு போதைப் பொருளுடன் வீட்டுக்குள் இருந்து தப்பியோடிய 'லக்ஷபதியே தம்ம' கைது. Reviewed by Madawala News on December 21, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.