கிழக்கில் இம்முறை 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி : 373 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.நூருல் ஹுதா உமர்

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் (2022) கிழக்கு மாகாணத்தில் 26,874 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி அடைந்துள்ளனர். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 136 மாணவர்களும், கல்முனை கல்வி வலயத்தில், 122 மாணவர்களும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் 112 மாணவர்களும் என ஆகக் கூடிய எண்ணிக்கையில் 9A சித்தி பெற்றுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் 373 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.


அதில் கிண்ணியா கல்வி வலயத்தில் 54 மாணவர்களும்,


 திருகோணமலை கல்வி வலயத்தில் 50 மாணவர்களும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் 38 மாணவர்களும், கந்தளாய் கல்வி வலயத்தில் 38 மாணவர்களும், கல்முனை கல்வி வலயத்தில் 25 மாணவர்களும் சகல பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.


மாணவர்கள் சித்தியடைந்த அடிப்படையில் கல்வி வலயங்களின் தரவரிசையில் இம்முறை முதலிடத்தை மட்டக்களப்பு கல்வி வலயம் தனதாக்கி கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயம் இரண்டாம் இடத்திலும், மகா ஓயா கல்வி வலயம் மூன்றாவது இடத்திலும், அக்கரைப்பற்று கல்வி வலயம் நான்காவது இடத்திலும், சம்மாந்துறை கல்வி வலயம் 11 வது இடத்திலும் உள்ளதுடன் இறுதி இடமான வலயம் 17 வது இடத்தில் கிண்ணியா கல்வி வலயம் உள்ளது.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR
கிழக்கில் இம்முறை 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி : 373 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். கிழக்கில் இம்முறை 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி : 373 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். Reviewed by Madawala News on December 03, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.