ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இப்போது பாதியாகி விட்டது ; அக்கட்சி எம்.பி எஸ். பி. திஸாநாயக்கஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இல்லை எனவும் அதில் பாதியளவு வாக்குகள் மட்டுமே இருப்பதாகவும் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கட்சி வீழ்ச்சியடைந்து விட்டதாகவும், கட்சியை மறுசீரமைத்து புதிதாக உருவாகும் கட்சியாக முன்னோக்கி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம் மாறி வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதை தவிர்க்க முடியாது. பொதுத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறு செயற்படும் என்பது குறித்து கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட இடைவெளியில் பெரும் பற்றாக்குறை நிலவுவதால் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர வேண்டுமானால் சிறு வணிகர்கள் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான பணத்தை பட்ஜெட் மூலம் ஒதுக்க முடியாது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இப்போது பாதியாகி விட்டது ; அக்கட்சி எம்.பி எஸ். பி. திஸாநாயக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இப்போது பாதியாகி விட்டது ; அக்கட்சி எம்.பி எஸ். பி. திஸாநாயக்க Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.