கட்டுநாயக்க விமான நிலையம் இவ்வருடம் 26 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியது ; போக்குவரத்து அமைச்சர்



 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2022 இல் 4 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்த நிலையில் இப்போது  2023 இல் 26 பில்லியன் ரூபா வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.


விமான நிலையத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ரேடார் பொருத்துதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 


BIA இல் பயணிகள் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) சலுகைக் கடனுடன் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையம் இவ்வருடம் 26 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியது ; போக்குவரத்து அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையம் இவ்வருடம்  26 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியது ; போக்குவரத்து அமைச்சர் Reviewed by Madawala News on December 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.