இஸ்ரேலில் 10,000 வேலைவாய்ப்புகள் உடன்படிக்கை : முதல் தொகுதியினர் இஸ்ரேல் சென்றனர். விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் முதலாவது குழு நேற்று (டிசம்பர் 18) இரவு இஸ்ரேலுக்குச் சென்றுள்ளது. 


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவில் முப்பது பேர் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இருபது பேர் கொண்ட மற்றொரு குழு இன்று (டிசம்பர் 19) காலை இஸ்ரேலுக்கு புறப்படும், முப்பது  பேர் கொண்ட மற்றொரு குழு இன்று இரவு இஸ்ரேலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 


சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற வைபவத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முதல் தொகுதி தொழிலாளர்களுக்கான விமான டிக்கெட்டுகள் கையளிக்கப்பட்டன.


இந்த நிகழ்வின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில் 10,000 பணியாளர்கள் இஸ்ரேலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்தப் பணிகளுக்கு எந்தத் தரப்பினருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறிய அவர், வெளிநாடுகளுக்குச் சென்று யாராவது பணம் கொடுத்து வேலை வாய்ப்புகளைப் பெற்றிருப்பது தெரியவந்தால், இரு நாட்டு அரசுகளும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றார். 


நிர்மாணத் துறையில் வேலை வாய்ப்புகளுக்காக இருபதாயிரம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் அறிவித்தார்.

இஸ்ரேலில் 10,000 வேலைவாய்ப்புகள் உடன்படிக்கை : முதல் தொகுதியினர் இஸ்ரேல் சென்றனர். இஸ்ரேலில் 10,000 வேலைவாய்ப்புகள் உடன்படிக்கை : முதல் தொகுதியினர் இஸ்ரேல் சென்றனர். Reviewed by Madawala News on December 19, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.